Breaking News

சதி வேலையால் 12 ஆண்டுகளுக்கு முன்பு தங்க பதக்கத்தை பிரேசில் நாட்டின் மரதன் வீரர் – ஒலிம்பிக் சுடரை ஏற்றி வைத்தார்!

பிரேசில் நாட்டின் புகழ்பெற்ற மாரத்தான் வீரர் வாண்டர்லி டி லீமா. 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றார்.

ஆனால் இவருக்கு கிடைக்க வேண்டியதோ தங்கப் பதக்கம். ஏனென்றால் அவர் இறுதி கட்டத்தில் முதல் ஆளாக ஓடி வந்து கொண்டிருந்தார்.

நிச்சயம் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஐரிஷ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் அவரை பிடித்து விட்டார்.

இதனால் அவர் பின்தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அந்த போட்டியில் வெண்கலம் மட்டுமே அவரால் வெல்ல முடிந்தது.

இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு ஒலிம்பிக்கில் புது கவுரவம் கிடைத்துள்ளது.

அதாவது cauldron எனப்படும் ராட்சத குடுவையில் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைக்கும் கவுரவம் தான் அது.

இந்த கவுரவம் பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலேவிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் இந்த வாய்ப்பு வாண்டர்லிக்கு கிடைத்துள்ளது.