Breaking News

பெண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளை நானும் அணுவைத்துள்ளேன் : நடிகை பார்வதி மேனன் !

பிரபல மலையாள நடிகை பார்வதி மேனன் ஒரு நிகழ்ச்சியில் கூறும் பொழுது, பாலியல் கொடுமைகள் என்பது எல்லா பெண்களுக்கும் இருக்கின்றது. அதை நானும் சந்தித்துள்ளேன். ஆனால், அதற்காக வேண்டி நாம் பொதுதளத்தில் இருந்து ஒதுங்கி போய்விடக்கூடாது.

பார்வதி மேனன் தமிழில் பூ, சென்னையில் ஒருநாள், மரியான், உத்தமவில்லன் போன்ற படங்களில் நடித்து அறிமுகமானவர். கொச்சியில் ஒரு கல்லூரியில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கூறியபோது, குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் கொடுமை, ஈவடீசிங், சமூக வலைதளங்கள் மூலமாக பெண்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றது.

அதில், நானும் பாதிக்கப்பட்டுள்ளேன். ஆனாலும், அதுபோன்ற சூழ்நிலைகளில் நான் பொது தளத்தில் இருந்து ஒதுங்கிப்போவதில்லை. தொடர்ந்து நாம் சமூக வலைதளத்தில் போராட வேண்டும் என்று கூறியுள்ளார்.