Breaking News

வழுக்கை விழுவதை எப்படி தடுக்கலாம்? இலகுவான வழி

ஆண்கள் சந்திக்கும் பல பிரச்சனைகளில் மிகவும் முக்கியமானது தலை வழுக்கை விழுவது தான்.

சிலருக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழுந்துவிடும்.

நீங்கள் உங்கள் தலைமுடியை நன்றாக பராமரித்தால், வழுக்கை விழுவதை தடுக்கலாம்.

அதற்கு சில எழிய வழிகள் சொல்கிறோம் கேட்டுக்கொள்ளுங்கள்,

கொஞ்சம் வெந்தயத்தையமும், சீரகத்தையும் ஊற வைத்து கலைவை செய்து தலையில் தடவி கொஞ்ச நேரம் கழித்து தண்ணீரில் அலசுங்கள்.

சிறிது கடுகு எண்ணையில், மருதாணி போட்டு கொதிக்க வைத்து மிதமாக மசாஜ் செய்யுங்கள்.

சிறிய வெங்காயத்தை அரைத்து அதனுடன் தேன் கலந்து தலையில் தடவி தண்ணீரில் அலசுவது முடியின் வளர்ச்சியைத் தூண்டும்.