Breaking News

இலங்கை அவுஸ்திரேலியா 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்

இலங்கை – அவுஸ்திரேலியா மோதும் 2வது டெஸ்ட் போட்டி, காலி சர்வதேச மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

முதலில் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. பல்லெகெலே மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் நம்பர் 1 அணியான அவுஸ்திரேலியா 106 ரன் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வியது.

இலங்கை அணி முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் போட்டி காலே சர்வதேச மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இலங்கை அணியில் வேகப் பந்துவீச்சாளர் நுவன் பிரதீப் காயம் அடைந்துள்ளதால், அவருக்கு பதிலாக அறிமுக வேகம் விஷ்வா பெர்னாண்டோ அல்லது அசிதா பெர்னாண்டோவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

அவுஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஓ கீபுக்கு பதிலாக ஜான் ஹாலண்ட் சேர்க்கப்பட்டுள்ளார். காலே ஆடுகளம் முதல் நாளில் இருந்தே சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், ஆஸ்திரேலிய அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது.