Breaking News

அமலா பாலை பிரிவது ஏன் ? இயக்குநர் விஜயின் உருக்கம் !

நம்பிக்கை மற்றும் நேர்மை உடைந்து போனால் திருமண வாழ்வை தொடர்வதில் எந்த அர்த்தமும் இருக்காது என இயக்குநர் எ.எல். விஜய் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமலா பாலிடம் இருந்து விவகாரத்து பெறுவதாக வெளியான தகவல்கள் உண்மையானது தான் என தெரிவித்துள்ளார்.

 பிரிவுக்கு காரணம் என்னவென்று தனக்கு மட்டுமே தெரியும் என்று அவர் அதில் கூறியுள்ளார்.

அமலாபாலை விவகாரத்து செய்வதற்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்க விரும்பவில்லை என்றும்  திருமணத்திற்கு பிறகு நடிக்க வேண்டும் என அவர் ஆசைப்பட்டதால் அதற்கு முடிந்த அளவு ஆதரவு தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனால் நடிப்பதால் தான் விவாகரத்து என்பது தவறான தகவல் என அவர் தெரிவித்துள்ளார். பிரிவினால் ஏற்படும் வலியை இதயத்தினுள் பூட்டிக் கொண்டு, வாழ்க்கையை கண்ணியமான முறையில் தொடர முடிவு செய்துள்ளதாகவும் விஜய் தெரிவித்துள்ளார்.