Breaking News

வடக்கு-கிழக்கில் இனரீதியான பதற்றத்தை தடுக்க விரைவில் நடவடிக்கை !!

வடக்கு மற்றும் கிழக்கில் இனரீதியாக பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இடம்பெறும் செயல்களை தடுத்து நிறுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கடந்த சனிக்கிழமை (27) அன்று பிரதமரை சந்தித்து உரையாடியபோதே பிரதமர் இவ் உறுதிமொழியை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

வட, கிழக்கு மாகாணங்களில் சனத்தொகை பரம்பலில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கிலும் வேண்டுமென்றே இனரீதியான பதற்றத்தை தூண்டும் நோக்கிலும் ஏற்படுத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் இச்சந்திப்பின்போது சுட்டிக்காட்டப்பட்டதோடு, வடக்கு கிழக்கில்தகுதியான பல இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பின்றி உள்ளார்கள் எனவும் பிரதமருக்கு எடுத்துக்கூறப்பமைக்கு பிரதமர் இதுபோன்ற விடயங்கள் குறித்து ஆராய்ந்து அவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக பிரதமர் ரணில் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற்து