Breaking News

ஆடிப்பூரத்தினை முன்னிட்டு மாபெரும் பால்குட பவனி

(லியோன்)

ஆடிப்பூரத்தினை முன்னிட்டு இன்று மாபெரும் பால்குட பவனி மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது .


கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு திருப்பெருந்துறை கொத்துக்குளத்து ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில்  ஆடிப்பூரம் நிகழ்வை முன்னிட்டு மாபெரும் பாற்குட பவனி 05.08.2016 இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

இன்று காலை மட்டக்களப்பு  வீரகத்தி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான ஆடிப்பூரப் பாற்குட பவனியில் காவடியாட்டம் சகிதம் நூற்றுக்கணக்கான பெண்கள் பாற்குடங்களை தாங்கியவாறு கலந்துகொண்டனர்.

பால்குட பவனியானது ஆலயத்தினை சென்றடைந்ததும்   அடியார்கள் கொண்டுசென்ற பால் அம்மனுக்கு அபிசேகம் செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து  அம்மனுக்கு விசேட  பூஜைகள் நடாத்தப்பட்டது.

பூஜையினை தொடர்ந்து பிரதான கும்பம் மற்றும் பரிபால மூர்த்திகளின் கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு  அம்மனுக்கு அபிசேகம் செய்யப்பட்டது.


இந்த ஆடிப்பூர விசேட பூசை நிகழ்வில்  பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர் .