Breaking News

மட்டக்களப்பு பெரிய உப்போடை புனித லூர்த்து அன்னையின் புதிய ஆலய திறப்பு விழா

(லியோன்)
மட்டக்களப்பு பெரிய உப்போடை புனித லூர்த்து அன்னையின் புதிய ஆலய நேர்ந்தளிப்பும், வருடாந்த திருவிழா கொடியேற்ற நிகழ்வும்  இன்று (5) வெள்ளிக்கிழமை ஆலய பங்குத்தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது
 இன்று மாலை   பார் வீதி சின்ன லூர்த்து அன்னை திருத்தலத்திலிருந்து திருச்சொருபம் பவனியாக எடுத்துவரப்பட்டு புதிய ஆலய திறப்பு விழாவுடன்
விசேட திருப்பலி மட்டக்களப்பு ஆயர் பொன்னையா ஜோசப் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது

நவநாள் காலங்களில் தினமும்   விசேட ஆராதனையுடன் திருப்பலியும் இடம்பெற்று,   13 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.15 மணிக்கு அன்னையின் திருச் சுரூப பவனி இடம்பெறவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை 14 ஆம் திகதி காலை திருவிழா கூட்டுத்திருப்பலி மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகையின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளதுடன், திருப்பலி வேளையில் பிள்ளைகளுக்கான முதல் நன்மை, உறுதிப்பூசுதல்   ஆயரினால் வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.