Breaking News

திருவதற்கென்றே புத்தளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த 17 வயது சிறுமியுடன் தாயும் தந்தையும் கைது !

நெராய்டினம்(5) யாழ்ப்பாணத்தில் இருந்து அளவெட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸில்  ஓடும் பஸ்ஸில் திருடிய ஒரே குடும்பத்ததை சேர்ந்த கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் பிரிவு தெரிவிக்கின்றது. பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவர் கைப்பையில் வைதித்திருந்த பணம், நகைகளுடன் கைத்தொலைபேசி என்பன திருடப்பட்டுள்ளது.

குறித்த பெண் எதேச்சியாக தனது கைப்பையினை பார்த்த வேளையில் பணம், நகை, மற்றும் கைபேசி என்பன திருடப்பட்டிருந்ததை தெரிந்துகொண்ட பெண் சாரதியிடம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சாரதி பஸ்சினை  சுன்னாகம் பஸ் நிலையத்திற்கு செலுத்தி பொலிஸாரினால் பயணிகள் அனைவரிடத்தியும்  சோதனையிடப்பட்டதில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் குறித்த பொருட்களை திருடி அவரது மர்ம உறுப்பில் மறைத்து வைத்திருந்தமை தெரியவந்தது. 

அதனைத் தொடர்ந்து பின்னர் குறித்த சிறுமியினது தாய் மற்றும் தகப்பனை கைது செய்து விசாரணை செய்ததில் இவர்கள் மூவரும் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் நல்லூர் திருவிழாவிற்கென  சாவகச்சேரி பகுதியில் வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தமையும் மேலும் இவர்கள் திருடுவதற்காகவே யாழ்ப்பாணம் வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்