Breaking News

மண்முனை வடக்கு திராய்மடு மாதிரி கிராமத்தில் கிணறு கட்டுவதற்கான அடிகள் நாட்டும் நிகழ்வு


(என்டன்)

இலங்கை ஜனாநயக சோசலிச குடியரசின்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்  நாட்டின் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க  பணிப்புரையின் கீழ் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் வழிகாட்டலின் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள   தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் நிதி உதவியின்  வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான  வாழ்வின் எழுச்சி திவிநெகும சமூக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மாவட்ட  ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் தெரிவு செய்யப்பட மாதிரி கிராமங்களில் கிணறு ,கழிவறை மற்றும் வீடு திருத்துவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் தெரிவு செய்யப்பட திராய்மடு கொலனி மாதிரி கிராமத்தில் கிணறு கட்டுவதற்கான அடிகள் நாட்டும் நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா தலைமையில் இன்று நடைபெற்றது .

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக திவிநெகும முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி . கே . நிர்மளா, மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ் .விஜெகுமார் ,இருதயபுரம் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி முகாமையாளர் செல்வி . பி .சாமினி , கிராம சேவை உத்தியோகத்தர் எ . நேசதுரை , வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் கே .காண்டீபன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர் .