திருகோணமலையில் துப்பாக்கி ரவைகள் மீட்பு
திருகோணமலைத் தலைமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மரத்தடிச் சந்தியிலுள்ள வளவொன்றினுள் இருந்து நேற்றிரவு T 56 ரக துப்பாக்கி ரவைகள் 54லும், M M துப்பாக்கி ரவைகள் 02 என்பன மீட்கப்பட்ட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவிதுள்ளனர்.
மேற்படி ரவைகளானது மலசலகூடம் கட்டுவதற்காக குழி தோண்டிக் கொண்டிருந்தபோது வீட்டு உரிமையாளர் துப்பாக்கி ரவைகள் இருப்பதை கண்டவுடன் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் படி ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸாரினால், துப்பாக்கி ரவைகளை மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது .