Breaking News

நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்புச்செய்த பெண்களை ஜனாதிபதி கௌரவித்தார்

நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்புச்செய்யும் பெண்களை  கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று(6) நடைபெற்றது. குறித்த பெண் தொழில் முனைவோரை, ஊக்குவிக்கும் நோக்கில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை இவ் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருவருவது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு வழங்கிய 10 பெண்கள் இதன்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதன்போது சிறந்த பெண் தொழில் முனைவோராகத் தெரிவு செய்யப்பட்ட லக்மினி விஜேசுந்தரவை ஜனாதிபதி தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்திருந்தார்.