Breaking News

ரியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் இரட்டையர் டென்னிஸ்: சானியா மிர்ஸா இணை தோல்வி

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்ஸா – பிரார்த்தனா தோம்ரே இணை சீனாவின் ஷுய் பென்ங், ஷுஆய் சங் இணையுடன் மோதியது.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சீன ஜோடியை சானியா – தோம்ரே இணை இரண்டாம் சுற்றில் வீழ்த்தியது. இருப்பினும் 3ஆம் சுற்றில் பதிலடி கொடுத்து சீன இணை வெற்றி பெற்றது.

முதல் செட்டை 6க்கு7 என்ற கணக்கில் சீன இணை கைப்பற்றிய நிலையில், இரண்டாம் சுற்றில் 7க்கு 5 என்ற கணக்கில் சானியா இணை சமன் செய்தது.

3வது சுற்றில் எழுச்சி பெற்ற சீன இணை 5க்கு7 என்ற கணக்கில் சானியா ஜோடியை வீழ்த்தியது. இது இந்திய ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.