Breaking News

கணவனுடன் சேர்ந்திருப்பதற்கு குழந்தைக்கு விஷம் கொடுத்த தாய்

வாசிங்டனில், கிம்பெர்லி மார்டின்ஸ் என்ற (23), இளம் பெண் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகின்றார். கணவனின் கவனத்தை பெறுவதற்காக தன்னுடைய 17 மாத குழந்தை பெய்டானுக்கு விஷம் கொடுத்துள்ளார். விசாரணையில் மனைவி, குழந்தைக்கு உப்பு ஒரு டி ஸ்பூன் கொடுத்து விட்டு பின்னர் தண்ணீரில் வீசியுள்ளார் என்று தெரியவந்தது.

பின்னர் கடும் காய்ச்சல் காரணமாக குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இரண்டு நாள் கழித்து கணவன் மார்ட்டீஸ் மருத்துவமனையில் சென்று பார்த்த போது குழந்தை கவலைக்கிடமான நிலையில் இருந்தது. குழந்தைக்கு மூளைச் சாவு ஏற்பட்டதை தொடர்ந்து செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது.

பின்னர் குழந்தையை கொல்ல முயன்ற குற்றத்திற்காக அந்த இளம் பெண் கைது செய்யப்பட்டார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளது.