Breaking News

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 10 மைல் சுற்றளவில் பயங்கர காட்டுத்தீ

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சுமார் 10 மைல் சுற்றளவில் காட்டுத்தி ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் அச்சத்திற்குள்ளாகி உள்ளனர்.பலர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நு£ற்றுகணக்கான தீயணைப்பு வீரர்கள்,16 தீயணைப்பு விமானங்கள் தீயை அணைப்பதில் போராடி வருகின்றன.தென் பகுதியில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதி மலை முழுவதும் தீ பரவி வருவதால் எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாக காட்சி தருகிறது.375 குடும்பங்களை அப்பகுதியில் இருந்து வெளியேறும்படி உத்தரவிட்டிருப்பதாக ஷான் பெர்னார்டினோ செரிப் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் நிருபரிடம் கூறியுள்ளார். தீ வேகமாக பரவி வருவதால் மேலும் 5,000குடும்பங்கள் வெளியேற்றப்படலாம் என்றும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹெலிகாப்டர்கள் அருகில் உள்ள சில்வர்வுட் ஏரியில் இருந்து தண்ணீர் நிரப்பி வந்து தீயின் மீது ஊற்றி வருகின்றன. இந்த தீயின் புகை 200 மைல் சுற்றளவுக்கு பரவி வருவதால் பலருக்கு குறிப்பாக முதியவர்களுக்கு முச்சு திணறல் ஏற்படும் வாய்ப்புள்ளதாக அப்பகுதி காற்று தரநிர்ணய அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால் 200 மைல் சுற்றளவில் உள்ள மக்களை பாதுகாப்பாக இருக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீயால் 57 வீடுகள் முற்றிலும் தீயில் எரிந்துபோனதாக தகவல் வெளியாகியுள்ளது.