பக்தர்கள் தலையில் 30 கிலோ மிளகாய் பொடி கரைசல் அபிஷேகம்!
தமிழகம் முழுவதும் அம்மன்கோவில்களில் ஆடி விழா விமர்சையாக கொண்டாபட்டுவருகிறது. பக்தர்கள் பால்குடம், தீசட்டி, அலகு குத்துதல் என பல நேர்த்திகடன் செலுத்துவது வழக்கம். சில கோவில்களில் தலையில் தேங்கா உடைத்து நேர்த்திகடன் செலுத்தவர்.
சென்னை அருகே கொரட்டூர், அக்ரகாரம், மாதனங்குப்பம், தானங்குப்பம், கச்சானகுப்பம், கருக்கு ஆகிய கிராமங்களில் கிராம தேவதையாகும்.
ஆடித்திருவிழாவை முன்னிட்டு தினசரி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலாங்கார பூஜை நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று காலை அம்மனுக்கு பாலாபிஷேகம்,வேல் தரித்தல் நடந்தது.
அம்பத்தூர்,கொளத்தூர்,பாடி,மண்ணூர்பேட்டை,வில்லிவாக்கம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1001 பெண்கள் பால்குடம் ஏந்தி வந்தனர்.
தொடர்ந்து, 250க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தி விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக சீயாத்தம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் 11 வாகனத்தில் திருத்தேர் வீதி உலா நடந்தது.
மேலும் அங்கு நடந்த, சடல் நிகழ்ச்சியில், முதுகு, காலில் அலகு குத்திய ஆறு பக்தர்கள் தராசு தட்டு போல் சுற்றி விடப்பட்டனர்.
பின்னர், அவர்களுக்கு மஞ்சள், திருநீறு, சந்தனம், இளநீர்,தேன், தயிர், பஞ்சாமிர்தம், நல்லெண்ணெய்,சீயக்காய்,போன்ற அபிஷேகம் செய்யப்பட்டது.
இதுவரை நடந்தது சாதாரண நிகழவுதான் இதற்கு அடுத்துதான் ஒரு கடுமையான அபிஷேகம் . இறுதியில் 30 கிலோ மிளகாய் பொடிகளால் மிளகாய் கரைசல் செய்யப்பட்டு அவர்கள் மீது அபிஷேகம் செய்யப்பட்டது.
சாதாரண பாலாபிஷேகம் போல் பக்தர்கள் அதை தாங்கி கொண்டது தான் சுவாரஸ்யம்.



