Breaking News

ஈழக்கோரிக்கையை கைவிட்டது E.P.R.L.F

ஈழமக்கள் புரட்சிகர முன்னணியானது, தமது பெயரை  தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி என பெயர் மாற்றம் செய்துகொண்டுள்ளது. இதற்கமைவாக, அக்கட்சியின் புதிய மத்திய குழுவினது முதலாவது நிர்வாகக் கூட்டம், திருகோணமலை கடற்காட்சி வீதியில் அமைந்துள்ள தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி அலுவலகத்தில், ஞாயிற்றுக்கிழமை (07) மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் பேச்சாளரும் வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான அ.வரதராஜப்பெருமாளும் கலந்துகொண்டிருந்ததுடன், மேலும் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியைப் பதிவு செய்வதற்கென தேர்தல் ஆணையாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் விரைவில் பதிவு செய்தல் இடம்பெறும் எனவும் கூறினார்.