Breaking News

காத்தான்குடியில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கர்பலா வீதியிலுள்ள நூறானியா சந்தியில், நேற்றயதினம்(9) மோட்டார் சைக்கிளும் லொறி ஒன்றும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் (வயது – 52) மரணமடைந்துள்ளார். 

மேற்படி நபர் படுகாயமுற்ற நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்ட நிலையில், அங்கு சிகிச்கை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸ்பிரிவினரால்  முன்னெடுக்க பட்டுவருகிறது.