Breaking News

HDFC வங்கி ஏற்பாட்டில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு

(லியோன்)

2016 ஆம்  ஆண்டு  தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு நாளை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது .


                                           
மட்டக்களப்பு  HDFC வங்கி ஏற்பாட்டில் “அறிவுப் பரிசு” எனும் தொனிப்பொருளில்  மட்டக்களப்பு மாவட்டத்தில்  தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களுக்கான பரீட்சை  வழிகாட்டல் கருத்தரங்கும், தேசிய நிறுவகத்தின் அதிகாரிகள் குழுவினால் தயாரிக்கப்பட்ட மூன்று மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய விடைகளுடனான  இலவசமாக முன்னோடி பரீட்சைகளும் 10.08.2016 புதன்கிழமை  நாளை  மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்திலும் 12.08.2016 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொக்கட்டிச்சோலை  கலாசார மண்டபத்திலும்  அன்றைய தினம் பாண்டிருப்பு கலாசார மண்டபத்திலும்  காலை 08.00 மணி முதல் நண்பகல் வரை நடைபெறவுள்ளது .

இவ்வருடம் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்காக விசேட வளவாலர்களினால் நடத்தப்படவுள்ள இந்த இலவச கருத்தரங்கில் அனைத்து மாணவர்களையும் கலந்துகொள்ளுமறு அழைப்பு விடுக்கின்றனர்.