Breaking News

விலைகளைக் குறைத்தது IOC

எக்ஸ்ட்ரா ப்ரீமியம் யூரோ 3 ரக பெற்றோல் மற்றும் எக்ஸ்ட்ரா மைல் டீசல் ஆகியவற்றிருக்கு நேற்று நள்ளிரவு (09) தொடக்கம் விலைகளை குறைந்துள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி எக்ஸ்ட்ரா ப்ரீமியம் யூரோ 3 ரக பெற்றோலானது, 121 ரூபாயிலுருந்து  119 ரூபாவிற்கும்,  97 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட டீசலானது  95 ரூபாய்க்கும் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. இவ்விலை குறைப்பானது உலகச் சந்தையில், எரிபொருட்களுக்கான விலைகள் குறைவடைந்துள்ளமையை கருத்திற்கொண்டே இடம்பெற்றதாகவும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்தது.