முன்னாள் போராளிகளின் மர்ம மரணங்கள் தொடர்பாக வெளிநாட்டு மருத்துவர்கள்...
புனர்வாழ்வு காலத்திலும் பின்னரும் இடம்பெறும் முன்னாள் போராளிகளின் மர்ம மரணங்கள் தொடர்பாக வெளிநாட்டு மருத்துவர்களினால் விசாரணை செய்யப்பட வேண்டுமென வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நேற்றயதினம்(09) வடமாகாணசபையின் 58 ஆவது அமர்வின்போது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், மாகாணசபை உறுப்பினர் ரவிகரனும் இணைந்து இந்த பிரேரணையை முன்வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.