Breaking News

20 வருடமாக வயிற்றிற்குள் 40 கத்திகளுடன் வாழ்ந்த நபர் !!

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரத்தில் தி கார்ப்பரேட் ஹாஸ்பிடல் என்ற மருத்துவமனை ஒன்று உள்ளது. அந்த மருத்துவமனையின் டாக்டர் ஜதீந்தர் மல்ஹோத்ரா கான்ஸ்டபிள் ஒருவரது வயிற்றில் இருந்து 40 கத்திகளை ஆபரேஷன் மூலம் எடுத்து சாதனை படைத்துள்ளார். அவரது 20 ஆண்டு கால மருத்துவ பணியில் இதைப்போன்ற சிரமமான ஒரு ஆபரேஷனை செய்திருக்கவில்லை என்று அதிர்ச்சி காட்டுகிறார்.

என்னதான நடந்திருக்குன்னு பார்ப்போம் வாங்க…

ஜர்னெயில் சிங்(42), ( பேரு அதில்லைங்கோ..மாத்தியாச்சி) என்ற ஒரு தலைமை காவலர், தி கார்ப்பரேட் ஹாஸ்பிடலில் பயங்கரமாக வயிறு வலிப்பதாக கூறி அனுமதிக்கபட்டிருந்தார்.டாக்டர்கள் வெளியே சோதனை செய்து பார்த்ததில் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர், ஸ்கேன் எடுக்கச் செய்து பார்த்தபோது டாக்டர் மல்ஹோத்ரா அதிர்ந்து போனார்.பின்ன இருக்காதா? ஒரு மனிசன் வயித்துக்குள்ள கத்திகளா இருந்தா? யாருக்குத்தான் அதிராது? அதிசயித்துப்போன டாக்டர் நோயாளியிடம் வந்து, ஏப்பா இந்த படத்தைப்பாரு. இது என்னன்னு தெரியிதா? என்று கேட்டார்.
நோயாளியோ.. அது எல்லாம் கத்தியா தெரியிது டாக்டர். அது யாரோடது? என்று கேட்டாரே பார்க்கலாம்? அது உங்க வயிற்றை ஸ்கேன் எடுத்த படம். எப்படி உங்க வயித்துக்குள்ள இத்தனை கத்தி? என்றார் டாக்டர்.

அது வந்து டாக்டர் எனக்கு என்னமோ கத்தியை பார்த்தாலே ஒரு விதமான மனநிலை ஏற்படுது. அதை எடுத்து விழுங்கிடுறேன் என்றார் அப்பாவியாக. உடனே அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்து பார்த்தால் வரிசையாக 40 கத்திகள் வெவ்வேறு சைஸ்களில் வருகிறது.

கடந்த 2 மாத காலங்களில் சாப்பிட்ட இந்த கத்திகளில் சில துரு பிடித்து சிதிலமான நிலையில் இருந்தது. வயிற்றுக்குள் ஏற்படும் வேதி வினைகளால் அந்த கத்திகளும் துருப்பிடிக்கும் நிலையில் இருந்தன.

இதில் அவருக்கு கடுமையான வலி ஏற்பட்டிருக்கிறது. ஆச்சர்யம் என்னவென்றால் அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று டாக்டரே ஆச்சர்யப்படுகிறார். மேலும் அறுவைச்சிகிச்சையே ஒரு வித அச்சத்துடன் தான் மேற்கொண்டோம். ஆனால், சிரமப்பட்டு கத்திகளை அகற்றி வெற்றி கண்டோம் என்று பெருமையுடன் கூறினார் டாக்டர் மல்ஹோத்ரா.