Breaking News

முதன் முறையாக சந்திரனுக்கு பயணிக்கும் அமெரிக்க தனியார் விண்கலம்

கடந்த 1969-ம் ஆண்டு அமெரிக்காவின் நாசா விண்கலம் அப்போலோ 11 விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பியது. அதில் நீல் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட 3 பேர் பயணம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து தனியார் நிறுவனங்கள் பூமியை விட்டு வெளிகிரகங்களுக்கு விண்கல பயணம் மேற்கொள்ள அமெரிக்க அரசு அனுமதி வழங்கவில்லை.

இந்த நிலையில், தற்போது புளோரிடாவில் கேப் கானாவரில் உள்ள ‘மூன் எக்ஸ்பிரஸ் மிஷின்’ என்ற தனியார் நிறுவனம் சந்திரனுக்கு விண்கலம் மூலம் பயணம் மேற்கொள்ள அமெரிக்க அரசிடம் அனுமதி பெற்றுள்ளது.

செவ்வாய், எரிகற்களுக் கும் செல்ல அந்த நிறுவனத் துக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் உரிமையாளரும், தலைமை நிர்வாகியுமான பாப் ரிச்சர்ட்ஸ் கூறும்போது, ‘அடுத்த ஆண்டில் சந்திர னுக்கு விண்கல பயணம் நடைபெறும்’ என தெரிவித்தார்.