Breaking News

2 ஆயிரம் அடி உயரத்தில் ஷூட்டிங்குக்காக 4 கிலோ மீட்டர் நடந்து சென்ற நமீதா…..

தம்பி வெட்டோத்தி சுந்தரம், சவுகார்பேட்டை  படங்களின்
இயக்குனர் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில்,  ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், உருவாகும்  படம் பொட்டு.

இந்தப் படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர்.

பொட்டு என்ன மாதிரியான படம் என்று இயக்குனர் வடிவுடையானிடம் கேட்டோம்… இது பரபரப்பான பேய் படமாக இருக்கும். மருத்துவக் கல்லூரி பின்னணியில் கதை அமைந்துள்ளது. சமீபத்தில் கொல்லிமலையில் படப்பிடிப்பை நடத்தினோம். ஆதிவாசிகள், பழங்குடிகள் பகுதியில் நடக்கும் காட்சி ஒன்றை படமாக்கினோம். இதற்காக கடல் மட்டத்திலிருந்து 2 ஆயிரம் உயர மலைப் பகுதியில் அரங்குகள் அமைக்கப்பட்டது.  இந்தக் காட்சியில் நமீதா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினோம்.

நாங்கள் படப்பிடிப்பு நடத்திய இடம் ரொம்பவும் மேடானது. வண்டி எதுவும் போகாது. 4 கிலோ மீட்டர்  எல்லோரும், எல்லா சாதனங்களையும் நடந்தே எடுத்துச் சென்று படமாக்கினோம் என்றார்.