விஜயின் அறுபதாவது படத்திற்கு ‘ எம்.ஜி.ஆர்’ பட தலைப்பா? விஜய் வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவா ?
விஜய் 60 வது படம் பரதன் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க…வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. படம் கூட எடுத்து விடலாம் போலிருக்கு…ஆனால், டைட்டில் சான்சே இல்லை, வைக்கறதுக்குள்ள…தாவு தீர்ந்துடுது இயக்குனர்களுக்கு.
விஜயின் இந்த 60 வது படத்திற்கு ‘எங்க வீட்டு பிள்ளை’ ன்னு டைட்டில் வைக்கலாமான்னு விஜய்கிட்ட கேட்டபோது..அவர் ஏற்கனவே ‘தலைவா’ ன்னு ஒரு பேரை வச்சிட்டு …நான் பட்ட பாடு இருக்கே…அய்யயோஓஓ…. அரசியல் சம்பந்தப்பட்ட எந்த தலைப்பும் வேணாம் என்று சொல்லிவிட்டார்.
இது தெரியாத,அனைத்துலக எம்ஜிஆர் பொதுநல சங்கம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. எங்க வீட்டுப் பிள்ளை ன்னு விஜய் தன் படத்திற்கு தலைப் பு வைக்கக்கூடாது. இதை வலியுறுத்தி… வரும் 14 ந் தேதி விஜய் வீட்டின் முன் போராட்டம் நடத்தவேண்டும்.அதற்காக.. முறைப்படி போலீஸ் அனுமதி பெறவேண்டும்.
பேர் வைக்கலாமான்னு பேசிக்கிட்டாங்கன்னு காதில் விழுந்ததுக்கே போராட்டம்தானா ?