மாணவியை ஆபாச செல்ஃபி எடுக்க தூண்டிய ஆசிரியருக்கு சிறை ! பயத்தில் மாணவி தற்கொலை!!
மும்பையில் பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவர் கணினி கற்றுத்தரும் மையத்தில் படித்து வந்துள்ளார்.
அங்கு கணினி ஆசிரியருக்கும் மாணவிக்கும் நீண்ட நாட்களாக நெருக்கம் ஏற்பட்டது. இதனால், தன்னுடைய ஆசிரியருக்கு அந்த மாணவி தன்னை ஆபாசமாக செல்ஃபி எடுத்து அனுப்பி வைத்துள்ளார்.
இருவரும் போன் மூலம் பல நாட்கள் கொஞ்சிப்பேசியும் உள்ளனர். ஆசிரியர் கேட்டுக் கொண்டதன் பேரில் அந்த மாணவி தனது ஆபாச செல்ஃபி படத்தை அவரின் போனுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
தன்னுடைய ஆபாச படத்தை அனுப்பிய பிறகு மாணவி பயந்து, அதனை உடனே அழிக்க அந்த ஆசிரியரிடம் வலியுறுத்தியுள்தாக தெரிகிறது. ஆனால் அவர் அதனை அழிக்காமல் அவரின் நண்பர்கள் சில பேருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதனைக் கேள்விப்பட்ட மாணவி, பயந்து தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதனையடுத்து, தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியர் மீது மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் அந்த ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் மும்பை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.