பிறக்கும் 15 சதவீத குழந்தைகளால் தாய்பாலை உறிஞ்ச முடியாது – மருத்துவர்கள் தகவல்!!
சில குழந்தைகள் பிறந்த உடன் ஆரோக்கியமாக, குழந்தைகளுக்கே உண்டான அனைத்து சைகைகளையும் சரியாக செய்வர்.
ஆனால் சில குழந்தைகளின் நடத்தை சற்று வித்தியாசமாக இருக்கும். அதிலும் குழந்தை தாய்பாலை உறிஞ்சாவிட்டால் குழந்தையின் தாய் அதிர்ச்சியில் உறைந்துவிடுவார்.
இதுபோன்ற சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளன. பெண்ணிற்கு பிறந்த ஆண் குழந்தை தாய் பால் சாப்பிடவில்லை. இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள, பிரிட்டன் பல்கலைக்கழக மருத்துவர் கந்தசாமி கணேசன், 10 முதல் 15 சதவீத குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை உள்ளதாக தெரிவித்தார்.
இதனை டங் டை எனக் குறிப்பிட்டுள்ள அவர், சில நிமிட சிகிச்சை இந்த பிரச்சனையை தீர்த்து விடும் என்றார். இதற்கு குறைந்த அளவு ரத்தம் சேதாரம் ஆகும் என்றும் குழந்தை பிறந்த 2 வாரங்களுக்குள் இதனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.