ஐ.எஸ்.எஸ் தீவிரவாதிகளுக்கு மீது ஆக்ரோஷப் போர் !
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் அனைத்து வகையிலும் ஆக்ரோஷமான முறையில் போரிடும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் நேற்று தேசிய பாதுகாப்பு குழுவை சந்தித்து பேசிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியதாவது:-
அப்பாவி மக்களை கொல்ல குறிவைத்து தங்களையும் பலிகொடுக்க தயாராக இருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தனிநபர் தாக்குதல் மற்றும் தீவிரவாத தாக்குதலை கண்டறிந்து தடுப்பது வரையில் கடினமானதாக உள்ளது.
இன்று நாங்கள் இது குறித்து விவாதித்தோம். ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அனைத்து நிலைகளிலும் இன்னும் கடுமையாக போரிட அர்ப்பணிப்புடன் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இடைவிடாது ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக தாக்குதல் தொடுத்தும் வரும் நிலையிலும் அந்த அமைப்பு தீவிரவாத தாக்குதலை ஊக்குவிக்கும் திறனுடன் திகழ்கிறது.
இருப்பினும், இந்த சூழல் மிகவும் சிக்கலானது என்பதையும் ராணுவ படையால் மட்டுமே இதற்கு தீர்வு கண்டுவிட இயலாது என்பதையும் அமெரிக்கா அறிந்துள்ளது.
இருப்பினும், ஐ.எஸ் அமைப்பு வெல்ல முடியாத நிலையில் இல்லை. அவர்களது தோல்வி தவிர்க்க முடியாதது. அந்த இயக்கத்தின் போர் மந்திரி பாசிம் முஹம்மது அல்-பஜாரி, மோசூல் நகரின் தலைமை தளபதி உள்பட பல தீவிரவாதிகளை வேட்டையாடி கொல்வோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.