விரைவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் – பார்ட் 3 !
வருதப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் சூப்பர் ஹீரோவாக உயர்ந்தார் சிவகார்த்திகேயன். இப்படத்தை இயக்கியது பொன்ராம். இந்த கூட்டணியில் உருவான ரஜினி முருகனும் சக்கை போடு போட்டது. கிட்டத்தட்ட வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் பார்ட் 2 ஆகவே இந்த படம் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் பொன்ராம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ரெமோ படத்திற்கு பிறகு இந்த கூட்டணி 3வது படத்தில் இணைகிறது. இந்த படத்தை ரெமோ பட தயாரிப்பாளரே தயாரிக்கிறார்.