Breaking News

விஜயின் தந்தை விபத்தில் படு காயம் !

இளைய தளபதி நடிகர் விஜய்யின் அப்பா இயக்குனர் எஸ். ஏ.சந்திர சேகர்.

ரஜினி நடித்த ‘நான் சிகப்பு மனிதன், விஜயகாந்த நடித்த சட்டம் ஒரு இருட்டறை, நீதிக்கு தண்டனை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகரன். இவரின் படங்கள் இந்தியில் ரஜினி அமிதாப் நடித்து பாலிவுட்டிலும் வெளியாகி உள்ளது

இவர் இன்று கேரளா குமரகம் பக்கத்தில் நடந்த சாலை விபத்தினால் தலை மற்றும் முதுகில் படு  காயங்களுடன்  அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள்.

இதற்கிடையே அங்கேயிருந்து சிலர் அவர் மாடியிலிருந்து தவறி விழுந்தார் என்றும்   தகவல்  சொல்லுகிறார்கள்.

இதில் எது சரி என்ற செய்தியும்.. எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளார் என்கிறதும்  இன்னும் உறுதி செய்யப்படவில்லை.