Breaking News

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கி வைப்பு-படங்கள்.

பெண்களுக்கும் வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியும்,முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான ஹாஜியானி சல்மா அமீர் ஹம்ஸாவின் ஏற்பாட்டில் பிரான்ஸ்,சுவிஸ்,ஜேர்மன் ஆகிய நாடுகளிலுள்ள புகலிடப் பெண்கள் சந்திப்பு நண்பிகளின் சார்பில் அவர்களின் முழுமையான அனுசரனையுடன் 'வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த பெண்களுக்கான தையல் இயந்திர் வழங்கும் நிகழ்வு 23-08-2016 நேற்று செவ்வாய்க்கிழமை ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிகரம் கிராமத்தில் இடம்பெற்றது.

முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி.என்.சத்தியானந்தி கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக ஆரையம்பதி பிரதேச சபையின் தவிசாளர் ந.கிருஷ்ணபிள்ளை, காத்தான்குடி காழி நீதிபதி மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி), மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் சபையின் தலைவர் வ.கமலதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது வன்னியில் இருந்து இடம்பெயர்நது வறுமை கோட்டின் கீழ் வாழுகின்ற பெண்களுக்கு அதிதிகளினால் தையல் இயந்திரங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் சிகரம் கிராமத்தைச் சேர்ந்த ஊர்பிரமுகர்கள்,உலமாக்கள்;,கல்வியலாளர்கள்,சிகரம்பிரதேச கிராம சேவை உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வறுமை கோட்டின் கீழ் வாழுகின்ற சுமார் 9 பெண்களுக்கு சுய தொழில் உபகரணங்களாக தையல் இயந்திரங்கள் முதற்கட்டமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுணதீவு,செங்கலடி போன்ற பிரதேசங்களில் வசித்துவரும் வறுமை கோட்டின் கீழ் வாழுகின்ற ஏனைய பெண்களுக்கு விரைவில் சுய தொழில் உபகரணங்களாக தையல் இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் பெண்களுக்கும் வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியும்,முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான ஹாஜியானி சல்மா அமீர் ஹம்ஸா தெரிவித்தார்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)