Breaking News

10 நாட்களில் இந்திய விமானங்களிலும் WiFi !!

பல வெளிநாட்டு விமானங்களில் இன்டர்நெட் சேவை இருந்து வருகிறது. ஆனால் இந்திய விமானங்களில் இது போன்ற இன்டர்நெட் சேவை இது வரை இல்லை. நாட்டின் பாதுகாப்பு நலனை கருத்திற்கொண்டு விமானத்தில் இன்டர்நெட் சேவை உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது.

தற்போது ஏவியேஷன் செயலாளர் சவுபீ இதுகுறித்து கூறும்போது, அரசு அடுத்த 10 நாட்களில் இந்திய விமான சேவைகளில் வை-பை வசதிகளை ஏர்பிளேன் மோடில் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த சேவை குறித்து மற்ற அரசு நிறுவனங்களுக்கும் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. ஆகவே, விரைவில் விமானத்தில் இன்டர்நெட் சேவை பெறும் நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த திட்டமானது முற்றிலும் டெலிகாம், உள்துறை மற்றும் ஏவியேஷன் அமைச்சகத்தை சார்ந்தது. இதற்கு அனுமதி கிடைத்து, இந்திய விமானத்துறை இந்த சேவையை அளிக்க முன்வருமானால், விமான பயணிகள் இன்டர்நெட் உதவியுடன் வாட்ஸ்-அப் மூலம் அழைப்புகளை பெற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.