52 வருடங்களாக ஒரே நிறத்தில் உடை அணியும் அமெரிக்க தம்பதியர் !!
அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் வசிக்கும் ஒரு தம்பதியினர் கடந்த 52 வருடங்களாக தினமும் ஒரே நிறத்திலேயே உடை அணிந்து வருகின்றனர்.
புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த பிரான் மற்றும் எட் கார்கீலா. இவர்களுக்குத் திருமணமாகி 52 வருடங்களாகி விட்டது.  பிரான் மற்றும் எட் கார்கீலா தம்பதியினர் நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் என்பதால் வார இறுதி கொண்டாட்டங்களில் இணைந்து நடனமாடி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை மகிழ்வித்து வந்துள்ளனர். ஆரம்பத்தில் நடனமாடுவதற்காக ஒரே நிறத்தில் உடை அணிந்த தம்பதியினர் காலப்போக்கில் ஒரே நிறத்தில் உடை அணிவதையே பழக்கமாக்கி கொண்டனர்.
புளோரிடா மாகாணத்தில் இந்த தம்பதியினர் பிரபலம் அடைந்திருந்தாலும், இந்த தம்பதியினரின் பேரன் தனது ட்விட்டர் பக்கத்தில்  இந்த தகவலை  வெளியிட்ட பின்புதான்  எட் கார்கீலா – பிரான் தம்பதியினர் உலக அளவில் பிரபலம் அடைந்துள்ளனர்.
 

 


 
 
 
 
 

