Breaking News

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஒரு உலக சாதனையால் தகர்க்கப்பட்ட இலங்கயின் இரு உலக சாதனைகள் !!!

நேற்று நடைபெற்ற அவுஸ்திரேலியா – இலங்கை அணிகள் இடையேயான முதல் டி.20 போட்டியில் அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது.

கடந்த  2006ம் ஆண்டு இலங்கை – நெதர்லாந்து  அணிகள் இடையேயான ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 443 ரன்கள் எடுத்து படைத்திருந்த சாதனையை கடந்த சில தினங்களுக்கு முன் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டியில் இங்கிலாந்து அணி 444 ரன்கள் எடுத்து இலங்கையின் ஒரு நாள் அதிக ரன்கள் குவித்த நாடு என்ற சாதனையை முறியடிக்கபட்டது மற்றும் டி.20 போட்டிகளில் கென்யாவுக்கு எதிராக 260 எடுத்த சாதனையினை நேற்றைய டி.20 போட்டியில் மேக்ஸ்வெலின் அதிரடியால் ஆஸ்திரேலிய அணி, இலங்கை அணிக்கு எதிராக 263 ரன்கள் எடுத்ததன்மூலம் முறியடித்துள்ளது.