Breaking News

குழந்தைக்கு விருப்பமான சிக்கன் வடை !!

தேவையான பொருட்கள் :

சிக்கன் (boneless ) - 300 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
மிளகு தூள் - சிறிதளவு
கரம் மசாலா - 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பிரட் தூள் - 150 கிராம்
முட்டை - 1
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

* சிக்கனை நன்றாக கழுவி தண்ணீர் நன்றாக வடிந்த பின்னர் மிக்ஸ்யில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் அரைத்த சிக்கனுடன், கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், மிளகு தூள் மற்றும் உப்பு போட்டு பிசைந்து வைத்துக் கொண்டு வடையாக அல்லது உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து அதில் உள்ள வெள்ளை கருவை மற்றும் ஊற்றி கொள்ளவும். 

* ஒரு பிளேட்டில் ரஸ்க் தூளை வைத்து கொள்ளவும். 

* ஒரு தாச்சியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் உருட்டி வைத்த உருண்டைகளை முட்டையில் பிராட்டிய பின்பு அதை பிரட் தூளில் போட்டு பிரட்டி எடுத்து எண்ணெய் போட்டு பொரித்து எடுக்கவும்.

* இப்போது சுவையான சிக்கன் வடை ரெடி.