Breaking News

முதல் தடவையாக விக்ரம் ஜோடியாக காஜல் அகர்வால்!

10 எண்றதுக்குள்ள’ படத்திற்கு பிறகு விக்ரம் ‘இருமுகன், கருடா’ ஆகிய இரண்டு படங்களில் நடிக்க கமிட்டாகியிருந்தார். இதில் ஆனந்த் ஷங்கரின் ‘இரு முகன்’ சமீபத்தில் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

திரு இயக்கத்தில் ரெடியாகவிருந்த ‘கருடா’ சில காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆதலால், விக்ரமின் அடுத்த படத்தை ‘பிரம்மன்’ இயக்குநர் சாக்ரடீஸ் இயக்கவுள்ளாராம். இப்படத்தை ‘சில்வர்லைன் பிலிம் பேக்டரி’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இதில் விக்ரம் ஜோடியாக காஜல் அகர்வால் டூயட் பாட கமிட்டாகியுள்ளாராம். இவர்கள் இருவரும் ஜோடி சேர்வது இதுவே முதல் முறையாம். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.