Breaking News

ரெமோ பாடல்கள் இணையத்தில் நேரடியாக வெளியீடு!

அறிமுக இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் படம் ரேமோ. சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் இணைந்து கலக்க உள்ள இந்த படத்தின் பாடல்கள் நாளை (செப்டம்பர் 5 ) வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பாடல்கள் நேரடியாக இணையத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.