Breaking News

அய்யோ இது சைத்தான் வீடியோ !!!

பிச்சைக்காரன்’ பட வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்து வரும் ‘சைத்தான்’ பட வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தை தீபாவளி வெளியீடாக திரைக்கு கொண்டுவர திட்டமிட்டிருக்கும் படக்குழுவினர் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை வெளியிட்டுள்ளனர்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இப்படம் தெலுங்கில் ‘பெத்தாலடு’ என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வரும் இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் கதாநாயகியாக அருந்ததி நாயர் நடிக்கிறார்.

‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன்’ நிறுவனம் சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை பிரசாத் கவனிக்கிறார். வழக்கம் போல இப்படத்திற்கும் விஜய் ஆன்டனியே இசை அமைக்கிறார்!…

செங்கல்பட்டு ஏரியாவில ’பிச்சைக்காரன்’ படத்தை வெளியிட்ட ஆரா சினிமாஸ் ’சைத்தான்’ படத்தின் தமிழக விநியோக உரிமையை கைபற்றியிருக்கிறது.