Breaking News

உலக திரைப்பட விழாவில் முதன்முறை மகுடம் சூடும் சூர்யாவின் “24 “

சூர்யா – சமந்தா நடித்த 24 படம் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. சயின்ஸ் பிக்ஸன் படமாகவும், ஆக்ஷன் படமாகவும், சிறந்த பொழுதுபோக்கு படமாகவும் பலவாறு ரசிகர்களை கவர்ந்தது 24.

இந்நிலையில் இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் முதன்முறையாக 3வது சில்க் ரோடு உலக திரைப்பட விழாவில் பங்கேற்க உள்ளது. 2016 ஆம் ஆண்டிற்கான போட்டியில் மீடியா ஹானர் பிரிவில் இந்த படம் பங்கேற்கிறது.

இந்த பிரிவில் பங்கேற்கும் முதல் படம் என்ற 24. இது தமிழ் சினிமாவிற்கும் சூர்யாவின் உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி என சூர்யா தரப்பு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.