இந்தியாவை உளவு பார்த்த ஜெர்மனி அதிகாரி கைது!!
ஜெர்மனி நாட்டின் மேற்கு ஓஸ்ட்வெஸ்ட்பாலன் நகரைச் சேர்ந்த 58 வயதான அதிகாரி ஒருவர் அந்நாட்டின் தூதரக அலுவலகத்தில் பணி புரிந்து வந்தார்.
இவர், இந்தியாவிற்காக சீக்கியர்களை வேவு பார்த்தல் குற்றத்திற்காக ஜெர்மனி சட்டத்தின் படி அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி வடக்கு ரைன் -வெஸ்ட்பாலியா நகரில் இவர் கைது செய்யப்பட்டார். அப்பொழுது முதலே இவர் போலீஸ் விசாரணையில் இருந்து வந்துள்ளளார்.
மேலும் தொழில்முறை, ரகசிய காப்பு விதிகளை மீறியது உள்ளிட்ட பிரிவுகள் உள்ளிட்டர் 45 வழக்குகளில் இவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.



