Breaking News

காட்டு யானையால் ஏற்படும் இழப்புகளுக்கான இழப்பீட்டுத்தொகை அதிகரிப்பு !

காட்டு யானை தாக்கத்தினால் ஏற்படும் மனித உயிரிழப்புக்கள் மற்றும் சொத்துச்செதங்கள் போன்றவற்றிற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையினை அதிகரிப்பதற்கு அமைச்சரவையில் அங்கிகாரம் கிடைத்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக யானையின் தாக்குதலினால் உயிரிழப்பவர்களுக்கும், நிரந்தரமாக அங்கவீனமடைபவர்கட்கும் இழப்பீடாக ரூபா 2 இலட்சம்மும், காயமுற்றால்  75 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படவுள்ளது. அத்தோடு வீடு மற்றும் சொத்துச் சேதங்களுக்கு, ரூபா 1 இலட்சம் ரூபாய் வீதம் வழங்கப்பட உள்ளத்துடன் தற்போதுள்ள வயது எல்லையும் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.