Breaking News

மீண்டும் காமெடி கிங் ஆக try பண்ணும் வடிவேலு…!

சுராஜ் இயக்கத்தில் விஷால்-தமன்னா நடிக்கும்‘கத்தி சண்டை’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் வேலை நடந்து வருகிறது . நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேல் மீண்டும் இந்த படத்தில் காமெடியில் கலக்குகிறார். அவருடன் சூரியும் நடிக்கிறார்.

இந்த படத்தில் வடிவேலு தனது ‘காமெடி’ காட்சிகளில் தீவிர கவனம் செலுத்தி நடித்திருக்கிறார். இவரது காட்சிகளுக்கான ‘டப்பிங்’கிலும் முழு ஈடுபாடுடன் , உற்சாகமாக வசனம் பேசி இருக்கிறார்.

அதுமட்டும் இல்லாமல், தன்னுடன் நடித்த மற்ற காமெடி நடிகர்கள் சிறப்பாக வசனம் பேச வேண்டும் என்பதால் அவர்கள் ‘டப்பிங்’ பேசுவதை அருகில் இருந்து கண்காணித்து வருகிறார் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.