Breaking News

இலகுவான இரவு உணவு ; ஈஸி அப்பம்

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், அரிசி மாவு - கால் கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், பொடித்த வெல்லம் - அரை கப், நன்கு பழுத்த பெரிய வாழைப்பழம் - ஒன்று (மசித்துக்கொள்ளவும்), சிறு பல்லாக நறுக்கிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, ஜாதிக்காய் பொடி - அரை டீஸ்பூன், பால் - தேவையான அளவு.

செய்முறை: கொடுத்துள்ள பொருட்களில், எண்ணெய் தவிர்த்து மற்ற பொருட்கள் அனைத்தையும் பால் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கலந்துகொள்ளவும். பின் சூடான எண்ணெயில் குழிக்கரண்டியால் மாவினை எடுத்து அப்பமாக ஊற்றி இருபுறமும் நிறம் மாறாமல் வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.