Breaking News

மேக்ஸ்வெல்லினது அசத்தலான பிடியெடுப்பு !!

அவுஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவர் மேக்ஸ்வெல். இவரது பேட்டிங் எதிரணியை கதிகலங்க வைக்கும். இலங்கை அணிக்கு எதிராக 2 டி20 போட்டியில் 211 ஓட்டங்களை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது பீல்டிங்கிலும் சாகசம் செய்து அசத்தி உள்ளார். அவுஸ்திரேலியாவில் நடந்த உள்ளூர் போட்டியில் விக்டோரியா அணிக்கு எதிராக ஆடி வருகிறார். அதன்படி விக்டோரியா மற்றும் மேற்கு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி நடந்தது.

இதில் நடந்த போட்டியின்போது மேக்ஸ்வெல் பவுண்டரி எல்லை கோட்டுக்கு அருகில் பிடித்த கேட்ச் அனைவரையும் வியக்க வைத்தது. எதிரணியான மேற்கு அவுஸ்திரேலியா அணியின் வீரர் டி அர்சே அடித்த பந்து சிக்சரை நோக்கி பறந்தது.

அப்போது எல்லைக்கோட்டிற்கு அருகில் இருந்த மேக்ஸ்வெல் அதனை தடுத்தது மட்டும் அல்லாமல் அதை மற்றொருவரிடம் வீசி பேட்ஸ்மேனை ஆட்டமிழக்க செய்தார். ஆனாலும் மழையால் பாதிக்கப்பட்டதால் மேக்ஸ்வெல் விளையாடிய விக்டோரியா அணி தோல்வி அடைந்தது.