Breaking News

காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் ஆசிரியர் தின நிகழ்வு-படங்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் ஆசிரியர் தின நிகழ்வு 27 நேற்று முன்தினம் வியாழக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் அதிபர் எம். சீ.எம்.ஏ.சத்தார்; தலைமையில்  இடம்பெற்ற மேற்படி ஆசிரியர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி நஜீம் அழைக்கப்பட்ட போதிலும் அவரின் சார்பில் அரபு மொழித்துறை பீடாதிபதி அஷ்ஷெய்க் எஸ்.எம்.எம். மஸாஹிம் (நளிமீ) கலந்து கொண்டார்.

இதன் போது அதிதிகளினால் வெற்றுக் காகிதங்களாக பள்ளி வரும் சிறுவர்களுக்கு ஒழுக்கம், நல்ல பழக்க வழக்கம், படிப்பு என அறிவுக் கண்ணை திறந்து வைத்து அவர்களை சாதனையாளர்களாக்கும்  அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்கள் விருதும்,பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள் ஆகியோரின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த ஆசிரியர் தின நிகழ்வில் கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம். சேகு அலி, பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எஸ். இஸ்ஸதீன், என். சிதம்பர மூர்த்தி, அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரி பீடாதிபதி எம். எம். நவாஸ் மற்றும் காத்தான்குடி பிரதேசக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். பதூர்தீன் உட்பட ஓய்வு பெற்ற அதிபர்கள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)