மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையின் பாடசாலை அபிவிருத்திச் சங்க வருடாந்த பொதுக் கூட்டம்
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையின் 2016 பாடசாலை அபிவிருத்திச் சங்க வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் 06-11-2016 ஞாயிற்றுக்கிழமை புனித மிக்கேல் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் தலைவரும்,கல்லூரி அதிபருமான ஆர்.வெஸ்லியோ வாஸ் தெரிவித்தார்.
மேற்படி பாடசாலை அபிவிருத்திச் சங்க வருடாந்த பொதுக் கூட்டத்தில் ஆரம்ப இறை வணக்கம்,வரவேற்புரை,வருடாந்த அறிக்கை,2015 வருடாந்த பொதுக்கூட்டறிக்கை,2015 பொருளாளரறிக்கை,வலயகல்விப்பணிமனை பிரதிநிதி உரை,கருத்துக்கள் மற்றும் பிரேரணைகள்,புதிய நிருவாக சபைத் தெரிவு,நன்றியுரை போன்ற நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.
தங்களது கருத்துக்கள் மற்றும் பிரேரணைகள் ஏதாவது பொதுக் கூட்டத்தில் சமர்ப்பிக்க விரும்பினால் அதை எழுத்து மூலமாக பதிவுத் தபாலில் அதிபருக்கு அனுப்பி வைக்குமாறு மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் வீ.பரமகுருநாதன் தெரிவித்துள்ளார்.
(பழுலுல்லாஹ் பர்ஹான்)