Breaking News

சாம்சங் மொபைல் தீப்பற்றியதால் விமானம் ரத்து !!

அமெரிக்காவில் ஓடுபாதையில் நின்று கொண்டிருந்த விமானத்தில்  பயணி ஒருவரின் செல்போன் திடீர் என தீப்பற்றியதால்  மற்ற பயணிகள் அச்சமடைந்தனர்.

விமான அதிகாரி ஒருவரின் தகவலால் அந்த விமானம் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டு, அதில் இருந்த பயணிகள் உடனேயே இறக்கிவிடப்பட்டனர்.

சௌத்வெஸ்ட் ஏர்லைன்ஸின் 994 என்ற விமானம் பால்டிமோருக்கு புறப்பட இருந்தபோது தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. விசாரித்ததில் அந்த புகை பிரியான் க்ரீன், என்ற பயணியின் சாம்சங் நோட் 7 போன் வெடித்து அதிலிருந்து வெளியானது என்பது உறுதி செய்யப்பட்டது.

உலகின் மிக பெரிய ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் , கடந்த மாதம் தனது சாம்சங் நோட் 7 போனின் பேட்டரில் குறைப்பாடு உள்ளது என அறிவித்தது. இதனால், உலகம் முழுவதிலும் விற்ற 2 மில்லியனுக்கும் மேற்பட்ட சாம்சங் நோட் 7 போனை திரும்ப பெறுவதாக அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.