Breaking News

தோனிக்காக மனைவி செய்த தியாகம் !

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எம்.எஸ். தோனி அன் டோல்டு ஸ்டோரி என்ற படம் தயாராகி உள்ளது. கடந்த 30ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களின் அமோக ஆதவை பெற்று வசூலை வாரி குவித்து வருகிறது.

இந்த படம் வெளியானது முதலே சில சுவாரசியமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தோனி படத்தில் சாக்ஷி கதாபாத்திரத்தில் கியாரா அத்வானி நடித்துள்ளார். கியாராவுக்கு சாக்ஷிதான் தோனியை சந்தித்தது, தோனி என்னவெல்லாம் செய்வார் என்பதை போன்ற பல தகவல்களை கூறியுள்ளார்.

அதுபோல சாக்ஷி தான் திருமணத்தின்போது எந்த உடையை அணிந்து திருமணம் செய்தாரோ அதே உடையை கியாராவுக்கு கொடுத்து நடிக்க சொன்னாராம். படத்தில் அந்த காட்சியை பார்த்த பலரும் சாக்ஷியை தொடர்பு கொண்டு உண்மையான திருமண நிகழ்ச்சியை நினைவு படுத்தும் விதத்தில் இருந்ததாக கூறினார்களாம்.

மேலும் தோனி சாக்ஷியை முதன் முதலில் கொல்காத்தாவில் உள்ள ஓட்டலில் பார்க்கும் காட்சிகள் மிகவும் அற்புதமாக இருந்ததாக சாக்ஷி கூறியதாக கூறப்படுகிறது.