மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிறக்கின்ற பிள்ளைகளுக்கான கேள் திறன் தொடர்பான பரிசோதனைகள் போதனா வைத்தியசாலையில் ஆரம்பம் .
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிறக்கின்ற புதிய சிறு குழந்தைகளுக்கு பரிசோதிக்கப்பட்டு இந்த பரிசோதனையின் மூலம் கேள் திறன் குறைபாடுகள் உள்ள குழந்தைகளை இனங்கானப்பட்டததின் பின் இவர்களுக்கான கேள் திறன் சிகிச்சைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன .
இதற்கான பொறிமுறைகள் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் எம் .இப்ரா லெப்பை தலைமையில் வைத்தியசாலை கேர்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது .
இந்த பரிசோதனை தொடர்பா மட்டக்களப்பு போதனா வைத்தியசால காது, மூக்கு ,தொண்டை ஆகிய பகுதிகளுக்கான வைத்திய நிபுணர் வைத்தியர் வி . ஜீவதாஸ் தெரிவிக்கையில் எதிர் வரும் காலங்களில் போதனா வைத்தியசாலையில் பிறக்கின்ற எல்லா குழந்தைகளையும் பரிசோதனை செய்யப்பட்டு இந்த பரிசோதனைகள் மூலம் கேள் திறன் அற்ற குழந்தைகளை கண்டு பிடித்து அதற்குரிய பரிகாரங்கள் செய்யப்படவுள்ளன
இதன் பிரகாரம் எதிர் காலத்தில் எங்கள் சமூகத்தில் கேள் திறன் அற்ற , பேச்சு திறன் அற்றவர்கள் இருக்கமாட்டார்கள் என மட்டக்களப்பு போதனா வைத்தியசால வைத்திய நிபுணர் வைத்தியர் வி . ஜீவதாஸ் தெரிவித்தார்
இவர்களை சிறுவயதிலே கண்டுபிடித்து இவர்களுக்கான கேள் திறனுக்குரிய கருவிகளை பொருத்துவதிலும் அதற்குரிய சிகிச்சைகளை செய்து அவர்களுக்குரிய கேள் திறனை விருத்தி செய்வதற்கான பொறிமுறையினை மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்
இந்நிகழ்வில் சுகாதார அமைச்சினுடைய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் லக்ஸ்மன் கம்லத், மட்டக்களப்பு காது,மூக்கு ,தொண்டை வைத்திய நிபுணர் வைத்தியர் வி . ஜீவதாஸ் , போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள் , வைத்திய அதிகாரிகள் , தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் போதனா வைத்தியசாலை கேட்பியள் தொழில் நுட்பவியலாளர் எஸ் . கேதாரலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர் .