Breaking News

மட்டக்களப்பு மாவட்டத்தை பிரநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளின் உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்ளும் கூட்டம்.

சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவபடுத்தும் உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியில் அங்கத்தவர்களாக இணைந்து கொள்ளும் கூட்டம் 28.11.2016 திங்கள்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் புதிய அங்கத்தவர்களாக இணைந்து கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தை பிரநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளின்உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளர் வேலுப்பிள்ளை மகேஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.

இடம்பெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட இணைப்பாளர் மொகமட் சாபி, மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட முகாமையாளர் வி.கே.லிங்கராசா ஐக்கிய தேசிய கட்சியின் காத்தான்குடி மத்திய குழு தலைவர் கே.எ.எ.அலிஸ், மாவட்ட மீனவ  சங்க உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி உறுப்பினர்கள், மகளிர் அமைப்புக்களின் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில்   மட்டக்களப்பு மாவட்டத்தில்  ஐக்கிய தேசிய கட்சியில் தங்களது புதிய உறுப்பு உரிமை மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளர் வேலுப்பிள்ளை மகேஸ்வரனிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.
(லியோன்)